தமிழீழ விடுதலைப் போராட்டம், முஸ்லிம் சமூகத்துடன் தொடர்பான நிலைப்பாடு: குற்றச்சாட்டுகளும் வரலாற்றுப் பின்னணியும்
தமிழீழத் தேசியத்தலைவர் வே. பிரபாகரன், அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டம் தமிழர்களுக்காக மட்டுமல்ல, தமிழர்களுக்கு கிடைக்கும் சம அந்தஸ்தும் உரிமைகளும் முஸ்லிம் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாக அவரது சமகால அரசியல் சந்திப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. இதன் வெளிப்பாடாக, 2002ஆம் ஆண்டு, முஸ்லிம் அரசியல் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் நேரடியாக, “நாங்கள் போராடுவது தமிழர்களுக்காக மட்டுமல்ல; தமிழர்களுக்கு கிடைக்கும் உரிமைகள் முஸ்லிம் மக்களுக்கும் கிடைக்கும்” என அவர் கூறியதை இன்று மீண்டும் சில அரசியல் தெளிவற்ற ஆட்களுக்கு நாங்கள் பதிவு செய்கின்றோம் .
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களிலேயே முஸ்லிம் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டிருந்தாலும், அவர்கள் பெரும்பாலும் பின்னர் த.வி.பு. அமைப்பில் இணைந்தனர்; அவர்களில் பலர் தளபதிகளாகவும் திறமையான போராளிகளாகவும் செயல்பட்டனர் .
ஆனால், இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு, இந்திய புலனாய்வு அமைப்பான ‘ரோ’ (RAW) தமிழீழத்தில் இயங்கிய பல ஆயுத இயக்கங்களில் தீவிரமாக தலையீடு செய்து, அவற்றை தவறான வழிநடத்தல்களுக்குள் இட்டது இதன் விளைவாக, சில மாற்றியக்கங்கள் சொந்த மக்கள்மீதே வன்முறைகள் புரியத் தொடங்கியதாகவும்,
இதை தேசியத்தலைவர் பிரபாகரன் கடுமையாக எதிர்த்தார் . மக்கள் பாதுகாப்பே போராட்டத்தின் அடிப்படை என்ற நிலைப்பாட்டை வலியுறுத்திய அவர், மாற்றியக்கங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த முயன்றது இந்திய அரசுக்கும் அதன் இராணுவத்துக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது என்பதே நிதர்சனம் .
இதன் தொடர்ச்சியாக இந்திய அமைதிப்படை தமிழீழத்தில் தலையீடு செய்ததும், அதில் ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் பெரும் சர்ச்சைகளுக்கு வழிவகுத்ததும் வரலாற்று உண்மைகளாக உள்ளன.
பின்னர், புலிகளை பலவீனப்படுத்தும் நோக்கில் பல சதித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும், அதில் ராஜீவ் காந்தி படுகொலை விவகாரம், மாத்தையா பிளவு முயற்சி உள்ளிட்ட பல சம்பவங்கள் குறிப்பிடப்படுகின்றன. இத்தொடர்ச்சியில், சில முஸ்லிம் போராளிகளை பயன்படுத்தி தலைமையை இலக்காக்கிய முயற்சிகளும் நடைபெற்றதாகவும், அவை பொட்டுஅம்மான் அவர்களின் புலனாய்வு நடவடிக்கைகளால் முறியடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
விசாரணைகளின் போது, சில பகுதிகளில் சட்டவிரோத ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட சம்பவங்கள், இனங்களுக்கு இடையிலான நீண்டகால பிளவுக்கு வழிவகுக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என கருதி, போராட்டத்தின் பாதுகாப்பு மற்றும் தலைமையின் நிலைத்தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, 1990ஆம் ஆண்டு யாழ் பகுதிகளில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட தீர்மானம் எடுக்கப்பட்டதாக புலிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த முடிவு ஒரு இன விரோதக் கொள்கை அல்ல, போராட்டத்தின் தொடர்ச்சியை பாதுகாக்க எடுத்த கடினமான அரசியல் தீர்மானம் . மேலும், முஸ்லிம் மக்கள் ஒரு தனித்த தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் கொண்டிருந்ததற்கான சான்றாக, 2002ஆம் ஆண்டு ரவூப் ஹக்கீமை முஸ்லிம் மக்களின் தேசிய அரசியல் தலைவராக மதிப்பளித்த சம்பவம் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆகவே, முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான துரோகம் என்ற குற்றச்சாட்டுகள் ஒரே கோணத்தில் முன்வைக்கப்படாமல், அக்கால அரசியல், இராணுவ, புலனாய்வு சூழல்கள் மற்றும் அதன் விளைவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய வரலாற்றுப் பின்னணியுடன் மதிப்பிடப்பட வேண்டும் .
இந்திய உளவுத்துறை ரோ வின் பரப்புரையை நம்பிக்கொண்டு எங்களுக்குள் முரண்படுவதை தவிர்த்து வரலாற்றில் என்ன நடந்தது என்ற தரவுகளின் அடிப்படையில் அனைத்து தமிழர்களும் மதங்கள் கடந்தது ,சாதிகள் கடந்து தமிழின மக்களாக தமிழீழ விடுதலைக்கு ஓரணியில் செயற்பட வேண்டும்
