எந்தையே உனைநான்
எங்ஙனம் அறிவேன்!
எதனிலும் நிறைந்த நின்
எளிமையை உணர்வேன்!
சிந்தையே நிறைந்திட்ட
சீர்மையில் நிறைவேன்
சீரிளம் பெரும் புயம்
எங்ஙனம் பெறுவேன்!
முந்தைய கதைகளை
முன்னே நான் கண்ணுற
முடிவிலும் முடிவுறா
முதற் பெரும் பொருளே!
விந்தைகள் விதைத்த நின்
விழிகளின் ஒளிதனில்
வீரியம் பெற்றநம்
விடுதலை வேண்டியே!
சந்திர சூரிய ஒளிமுதல்
சாய்கிற போதிலும்
சாய்ந்திடா வண்ணம்
தகிக்கின்ற ஒளியே!
வந்ததை வாழ்வென
நினைந்து நான் மடியவோ!
வாராத தென்றறிந்துமே
வாசலில் தணியவோ!
சந்ததி தேடிடும் சத்திய தீபமே!
சரித்திரம் காணா அருட்பெரும் சோதியே!
எந்தையாய் நின்று எம்முளே ஒளிர்ந்து
சிந்தையை என்றும் சீர்படச் செய்வாய்![]()
–#காந்தள்–
