மத்திய கிழக்கில் அமெரிக்கா–ஈரான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததைத் தொடர்ந்து, அந்தப் பிராந்தியத்தில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இரு தரப்பினரும் மேற்கொண்ட புதிய தாக்குதல்கள் வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு மற்றும் சர்வதேச கடல் போக்குவரத்து குறித்த கவலையை அதிகரித்துள்ளன.இந்தச் சூழ்நிலையை தொடர்ந்து, மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் பிராந்திய அமைதிக்கும், சர்வதேச வர்த்தகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என இந்தியா கவலை தெரிவித்துள்ளது. பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கைகளைத் தவிர்த்து, அனைத்து தரப்பினரும் அமைதி மற்றும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் கச்சா எண்ணெய் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கியுள்ளது. இதன் தாக்கம் உலக பொருளாதாரத்திலும் எதிரொலிக்கக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு நிலைமையை இந்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
