1990ம் ஆண்டு இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த காலப்பகுதியில் இராணுவத்திற்கெதிரான தாக்குதல்கள் ஒவ்வொரு மாவட்டப் படையணியினரும் தத்தமது மாவட்டங்களை இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்க்கு கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்தனர்.அதேசமயம் இராணுவம் மேலதிக பகுதிகளை கைப்பற்றும் முயற்சிகளுக்கெதிராக முறியடிப்புச்சமர்களையும் நடாத்திக்கொண்டிருந்தனர்.அதே சமயம் கடற்புறா அணியினர் இவர்களுக்குத் தேவையான பலபொருட்களை தாய்த் தமிழகத்திலிருந்து கடல்வழிமூலம் தமிழீழத்திற்க்கு கொண்டுவந்து கொண்டிருந்தனர்.அதுமட்டுமல்லாது பாரிய காயமடைந்தவர்களையும் அங்கு அனுப்பி சிகிச்சைகளையும் மேற்கொண்டு வந்தனர்.

இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்தவுடன் கடல்வலயத்தடைச் சட்டம் போடப்பட்டதாலும் கடற்படையின் பாரியகட்டளைக் கப்பலான எடித்தாராக் கட்டளைக்கப்பலை வல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் கடற்படையினர் கொண்டுவந்து நிறுத்தியதாலும் இக் கடல்வழி விநியோகத்திற்க்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டது.இவ்விடயங்கள் தலைவர் அவர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டது .இதனைக் கருத்திலெடுத்த தலைவர் அவர்கள் இதனை வேகமாக அப்புறப்படுத்தி இவ்விநியோக நடவடிக்கையைத் தெடரவேண்டிய நடவடிக்கையில் தானே நேரடியாக ஈடுபட்டார்.தலைவர் அவர்களின் தெலைநோக்குச் சிந்னைக்கமைவாக தனது பாதுகாப்புப் பிரிவிலிருந்து கடற்புறா அணிக்கு அனுப்பப்பட்ட காந்தரூபன் அவர்கள்.ஏற்கனவே பெரிதாக எதையாவது சாதிக்கவேண்டும் என்று சகபோரளிகளுக்குச் சொல்லியும் அதற்கான நடவடிக்கைகளிலும் செயற்பட்டுக் கொண்டிருந்ததுடன்.தலைவர் அவர்களுடன் மணலாற்றுக் காட்டில் நின்ற சமயம் தனது ஆரம்பகால நினைவுகளைக் கூறி தலைவர் அவர்களிடம் தன்னை கரும்புலிகளணியில் இணைத்திருந்தார்.காந்தருபன் அவர்கள்.கொலின்ஸ் அவர்களும் மணலாற்றுக் காட்டில் தலைவர் அவர்களின் பாதுகாப்பணியில் இருந்து செயற்பட்டு கொண்டிருந்த வேளையில் தலைவர் அவர்களிடம் நேரடியாக கேட்டுத் தன்னை கரும்புலிகளணியில் இணைத்திருந்தார்.இவர்களுடன் வடமராட்சி அணியிலிருந்து ஏற்கனவே கரும்புலிகளிணியில் தன்னை இணைத்திருந்த வினோத் அவர்களும் இக்கடற்கரும்புலித்தாக்குதலுக்காக தேர்வு செய்யப்பட்டு கடுமையான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு தாக்குதலுக்கான திட்டம் விளங்கப்படுத்தப்பட்டன .இத்திட்டத்தின் அடிப்படையில்

10.07.1990 அன்று தளபதி லெப்.கேணல்.டேவிற் அவர்களும்( வீரச்சாவு 09.06.1991 )
தளபதி லெப் கேணல்.அருச்சுனா அவர்களும் (வீரச்சாவு 16.12.1997)
கப்டன் தினேஸ் அவர்கள்( வீரச்சாவு 12.08.1991)
தலைமையிலான படகுகள். எடித்தாரக் கட்டளைக்கப்பலுக்குப் பாதுகாப்பாக நின்ற கடற்படைக் கலங்களுக்கு தாக்குதலைத் தொடுத்து திசைதிருப்ப கடற்கரும்புலிகள் தங்களது படகால் எடித்தாராக் கட்டளைக்கப்பல் மீது மோதி வெடித்தனர்.
கப்பல் பாரிய சேதத்திற்குள்ளானது.இவ்வெற்றிகர முதலாவது கடற்கரும்புலித்தாக்குதலை தளபதி டேவிற் அவர்கள் கடலில் வழிநடாத்த தலைவர் அவர்கள் வல்வெட்டித்துறை கடற்புறாத் தளத்திலிருந்து நெறிப்படுத்தித் கட்டளைகளைக் கொடுக்க தளபதி பிருந்தன் மாஸ்ரர் அவர்களும்

தளபதி லெப் கேணல்.சாள்ஸ் வீரச்சாவு (11.06.1993) அவர்களும் தலைவர் அவர்கள் அருகிலிருந்து வழிநடாத்தினார்கள்.இந் நடவடிக்கைக்கான அனைத்து வேலைத்திட்டங்களையும் கப்டன் மோகன் மேத்திரி (வீரச்சாவு02.09.1990) அவர்கள் தலைமையிலான அணி செவ்வனவே செய்து கொடுத்திருந்தது. இம்முதலாவது கடற்கரும்புலித் தாக்குலில்



கடற்கரும்புலி மேஐர் .காந்தரூபன்.
கடற்கரும்புலி கப்டன்.கொலின்ஸ்.
கடற்கரும்புலி கப்டன் . வினோத்.
ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.
குறிப்பு..தலைவர் அவர்கள் கடற்புலிகளுக்குக் ஒரு தகவலை தெளிவாகச் சொன்னார்.அதாவது கடற்கரும்புலிகளின் தாக்குதலுக்குச் சேதமான கடற்கலங்கள் மீண்டும் கடலில் செல்லக்கூடாது .அந்தவகையில் எடித்தாராக்கப்பல் 16.07.1995 அன்று காங்கேசன்துறைமுகத்தினுள் கடற்கரும்புலிகளான மேஐர் தங்கன் மேஐர் நியூட்டன் கப்டன் தமிழினி ஆகியோர் ஊடுருவிச் சென்று மூழ்கடித்து.தலைவர் அவர்களின் சொல்லுக்குச் செயல்வடிவம் கொடுத்தனர்.
எழுத்துருவாக்கம்..சு.குணா.
