தமிழீழத் தாயவள் தியாகி அன்னை பூபதி அவர்களின்38 ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் நாட்டுப்பற்றாளர் நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு செல் பிரதேசத்தில் நேற்று 19.04.2026; ஞாயிற்றுக்கிழமை பி. பகல் 13. 00 மணிக்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பு, மாவீரர் பணிமனை மற்றும் பிராங்கோ செல் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து நடாத்தப்பட்டது.
ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. பொதுச்சுடரை செல் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. கிருஷ்ணபிள்ளை ரமேஸ்கரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து மாவீரர் பொதுப்படத்திற்கான சுடரினையும் தமிழீழத்தாயவள் அன்னை பூபதியம்மாவின் திருவுருவப்படத்திற்கான சுடரினையும் மாவீரர் குடும்ப உறுப்பினர்கள் ஏற்றிவைக்க, நாட்டுப்பற்றாளர்களின் திருவுருவப்படங்களிற்கான சுடர்களை பிரான்சு மற்றும் தாயகத்தில் சாவடைந்த நாட்டுப்பற்றாளர்களின் உறவுகள் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தியதைத்தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து பொதுமக்கள் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தியிருந்தனர்..
தொடர்ந்து மாவீரர் பாடல்களுக்கான நடனத்தை ஒள்னே சுபுவா தமிழ்ச்சோலை,,செல் தமிழ்ச் சோலை, தொர்சி தமிழ்ச் சோலை மாணவர்கள் வழங்கியிருந்தனர். அன்னை பூபதி அம்மா நினைவு சுமந்த கவிதையை பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பைச் சேர்ந்த திருமதி எட்வேட் யசோதா அவர்களும், உரையினை தமிழ் பெண்கள் அமைப்பைச் சேர்ந்த திருமதி பாலசுந்தரம் ஜெயக்குமாரி அவர்களும் ஆற்றியிருந்தனர்.
தமிழர் கலைபண்பாட்டுக்கழக கலைஞர்கள், பாடகர்கள்,மாணவர்கள் எழுச்சிப்பாடல்களை கரோக்கி இசைமூலம் வழங்கியிருந்தனர்..
சிறப்பு உரையினை அன்னை பூபதி சமூக மேம்பாட்டு ஒன்றியத்தின் சார்பில் திரு.அமுதன் அவர்கள் ஆற்றியிருந்தார்.
தொடர்ந்து “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்” என்ற தாரக மந்திரத்துடனும் நிகழ்வு நிறைவு கண்டது.
(தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு- செய்திப்பிரிவு)



















