நீதிச்சேவை ஆணைக்குழுவினால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மற்றும் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளது.
வருடாந்த இடமாற்றத்துக்கு அமைய நீதிபதி டி. எஸ். சூசைதாசன் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்திற்கும் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் இதுவரை காலமும் கடமையாற்றிய ஏ அலெக்ஸ் ராஜா யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் இடமாற்றம் பெற்றுள்ளனர்
அந்தவகையில் எதிர்வரும் 22 ஆம் திகதி அமுலாகும் வகையில் இந்த இடமாற்றங்கள் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ளது.
