மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக, குவைத்துக்கான தனது விமானச் சேவைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை (CAASL) விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.
அதன்படி, குவைத்துக்கான விமானச் சேவைகள் நேற்று (20) முதல் ஜூலை 26, 2026 வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
மேலதிக தகவல் அல்லது உதவி தேவைப்படும் பயணிகள், 1979 (இலங்கைக்குள்), +94 11 777 1979 (சர்வதேசம்), வாட்ஸ்அப் +94 74 444 1979 (அரட்டை மட்டும்) வழியாக விமான நிறுவனத்தைத் தொடர்புகொள்ளுமாறு ஏர்லைன்ஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
அல்லது பயணிகள் பயண முகவரைத் தொடர்புகொள்ளுமாறு அல்லது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
