யாழ்ப்பாணம் பொது நூலகத்திலிருந்து இன்று காலை ஆரம்பமான பேரணி யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தை வந்தடைந்து அங்கிருந்து வைத்தியசாலை வீதி ஊடாக கோவில் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் நோக்கி சென்றடைந்தது.
இதன்போது, கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விவகாரங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு நீதியும் பொறுப்புக்கூறலும் வழங்கப்பட வேண்டும் என்றும், சர்வதேச விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி மனுவொன்று கையளிக்கப்பட்டது.
பல நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட “நீதியின் ஓலம்” போராட்டம், சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை மீண்டும் வலுவாக வெளிப்படுத்திய நிலையில் இன்று நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
