பிரித்தானியாவின் – கிழக்கு சசெக்ஸில் உள்ள கேம்பர் செண்ட்ஸ் கடற்கரையில் நீராடச்சென்ற பிரித்தானிய குடியுரிமை பெற்ற இலங்கை இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று நீரில் சிக்கித் தவித்த மூன்று பேருக்கு உதவுவதற்காக அவசர சேவைகள் அழைக்கப்பட்டதாகவும் சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் ஒருவர் கடலில் இருந்து மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், மருத்துவக் குழுவினரின் தீவிர முயற்சிகளையும் மீறி, சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது
