தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு ஈருருளிப் பயணம், ஐரோப்பாவின் பல்வேறு நகரங்களை ஊடறுத்து தற்போது சுவிட்சர்லாந்தின் பாசல் நகரை வந்தடைந்துள்ளது.
தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக தமிழீழமே அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தி பிரித்தானியாவில் இருந்து ஜெனிவா நோக்கி இந்த ஈருருளிப் பயணம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 26.08.2026 அன்று பிரித்தானியாவில் ஆரம்பமான இப்பயணம், பல்வேறு ஐரோப்பிய நகரங்கள் ஊடாக தொடர்ந்து பயணித்து, தற்போது சுவிட்சர்லாந்தின் பாசல் நகரை வந்தடைந்துள்ளது.
பாசல் நகரில் அகவணக்கத்துடன் 15ஆம் நாள் பயணம் ஆரம்பிக்கப்பட்டதுடன், தமிழர் நீதிக்கான கோரிக்கைகளை முன்னிறுத்தி ஜெனிவா நோக்கிய பயணம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
எதிர்வரும் 14.09.2026 அன்று ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபை முன்றலை சென்றடையும் வரை இக்கவனயீர்ப்பு ஈருருளிப் பயணம் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.



