நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவரும் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்த நிலையில் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலும் நிகழ்ந்த உயிரிழப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் நீர்கொழும்பு சிறையில் சமீபத்தில் நடந்த மோதலைத் தொடர்ந்து வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகள் குழு ஒன்று, சிறை அதிகாரிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகவும், அதன் விளைவாக அவர்களில் இருவர் உயிரிழந்ததாகவும் கைதிகள் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு குற்றம் சாட்டியுள்ளது.
இந்த மரணங்கள் சிறை அதிகாரிகளால் திட்டமிடப்பட்ட பழிவாங்கும் செயல் என்று அக்குழு நேரடியாகத் தெரிவித்துள்ளது.
இதன்படி கைதிகள் உரிமைகள் பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுதேஷ் நந்திமல் சில்வா மற்றும் அதன் தலைவரான சட்டத்தரணி சேனக பெரேரா ஆகியோர் சமூக ஊடகங்களில் இந்த விடயத்த பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளனர்
பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து மாற்றப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த கைதி உயிரிழந்துள்ளார்.
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக குறித்த கைதி உயிரிழந்ததாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
