புலிகளின் உடலங்களை துகிலுரித்து இழிவுபடுத்திய பின்னணி:
சரத் பொன்சேகாவின் போர்க்குற்றங்களும் வெளிப்படும் சான்றுகளும்.
சரத் பொன்சேகாவின் பின்னணியை இன்னமும் சரிவரப் புரிந்து கொள்ளாத பல தமிழர்கள், அவர் தேசியத் தலைவரைப் புகழ்ந்தார் என்பதற்காக அவரைத் தூக்கி நிறுத்தும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், கடந்த கால வரலாற்றுப் பதிவுகளின்படி அவர் ஒரு போர்க்குற்றவாளியாகவும், இனப்படுகொலையாளியாகவுமே அடையாளப்படுத்தப்படுகின்றார்.
இறுதிப் போரின்போது மீட்கப்பட்ட புலிகள் இயக்கத் தலைவரின் சடலம் ஆடைகளுடன் காணப்பட்டதைக் கண்டு சீற்றமடைந்த இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆடைகளை அகற்றுமாறு உத்தரவிட்டார் என உறுதியான ஆதாரங்கள் பல தருணங்களில் வெளிவந்துள்ளன.
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் இலங்கைப் படையினருடன் களத்தில் உடனிருந்த பத்திரிகையாளர் திஸ்ஸ ரவீந்திர பெரேரா, 2018 அன்று சிங்களச் செய்தித்தாள் ஒன்றில் எழுதிய கட்டுரையில் இதனை வெளிப்படுத்தியிருந்தார். மேஜர் ஜெனரல் சாகி கல்லகே என்பவரின் முப்பதாண்டுக் காலப் படைப்பணியைப் போற்றியும், அவர் பணி நிறைவு பெறுவதை முன்னிட்டும் அக்கட்டுரையானது வரையப்பட்டிருந்தது.
2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் நாள், படைச்சீருடை அணிந்து உயிரிழந்த நிலையில் காணப்பட்ட பு*லி^க&ளி^ன் தலைவரை, நூற்றுக்கணக்கான அரசப் படையினர் சூழ்ந்திருந்த காணொளிக் காட்சிகளை அரசுத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
அவரது சடலம் சீருடையுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டதைக் கண்டு ஆத்திரமடைந்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, அச்சீருடையை அகற்றுமாறு படையினருக்குக் கட்டளையிட்டுள்ளார். மேலும், “அவருக்குக் கோவணத்தை அணிவியுங்கள்” என வடக்குப் போர்க்களத்தில் இருந்த தளபதிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அந்த உத்தரவைப் படைப்பிரிவுத் தளபதியான சாகி கல்லகே நிறைவேற்றியதாகவும் அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அக்கட்டுரையில், “பயங்கரவாதத் தலைவரைச் சீருடையில் சித்தரித்து அவரை ஒரு கதாநாயகனாகக் காட்டுவதைத் தவிர்ப்பதற்காகவும், நாட்டின் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்காகவுமே அவருக்குக் கோவணம் அணிவிக்கப்பட்டது” என பிரிகேடியர் சாகி கல்லகே குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தின் இழிவான செயலை வெளிப்படுத்தும் என அறியப்படாத இந்த இரகசியமானது, போர் முடிவடைந்து 9 ஆண்டுகளுக்குப் பின்னர், அதாவது 2018 ஆம் ஆண்டு அக்கட்டுரையின் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையொத்த மற்றொரு சான்று.
இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தளத்தில் உள்ள கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: பி*ர&பா^க@ர*ன் அவர்களின் உடல் கண்டுபிடிக்கப்பட்டபின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அப்போது அவர் “Terrorists can’t wear uniforms”(பயங்கரவாதிகள் எல்லாம் சீருடை அணிய முடியாது) என்று கூறி பி*ர#பா&க^ர*ன் அவர்களது சீருடையை அகற்றுமாறு உத்தரவிட்டார். இதன் காரணமாகவே, தொலைக்காட்சியில் அவரது சடலம் அரை நிர்வாணமாகக் காட்டப்பட்டது எனவும் அக்கட்டுரை கூறுகிறது. அன்று காலை 53ம் படைப்பிரிவின் தளபதி கமல் குணரத்ன அவர்களைத் தொடர்புகொண்ட சரத் பொன்சேகா இதனைத் தெரிவித்திருக்கின்றார். அதாவது “பயங்கரவாதிகள் சீருடை அணிய முடியாது” என்பதால், பி*ர&பா^க£ர#ன் அவர்களின் சீருடையை அகற்றுமாறு உத்தரவிட்டிருக்கின்றார், அந்த உத்தரவை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார் என அதில் கூறப்படுகின்றது. இவ்வாறு இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தளத்திலும் உறுதியான சான்றுகள் உள்ளன.
“பயங்கரவாதிகள் சீருடை அணிய முடியாது” என்ற நிலைப்பாட்டில் சரத் பொன்சேகா தீவிரமாக இருந்தார் என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது. இசைப்பிரியா உள்ளிட்ட பல பெண் மற்றும் ஆண் போராளிகள் நிர்வாணமாக்கப்பட்டதன் பின்னணியிலும் சரத் பொன்சேகாவின் இத்தகைய உத்தரவுகளே இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆனால், வி*டு&த^லை@ப் பு*லி&க^ள் போரில் கொல்லப்பட்டவர்களின் ஆடைகளை அகற்றும் கோழைத்தனமான செயல்களில் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. அவர்கள் எதிரிகளின் சடலங்களைக் கண்ணியமாகவே கையாண்டனர். மேலும், அவர்கள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எக்காலத்திலும் முன்வைக்கப்பட்டதும் இல்லை.
போரில் கொல்லப்பட்ட எதிரணியினரை நிர்வாணமாக்கி ரசிப்பதைத் தமது வீரமாகச் சிங்களப் படையினர் கருதியுள்ளனர். ஆனால், இது ஒரு காட்டுமிராண்டித்தனம் என்பதை இவர்கள் உணரவில்லை. மனித மாண்பு, அறநெறி மற்றும் போர் நெறிமுறைகளுக்கு இது முற்றிலும் முரணானது என்பதையும் இவர்கள் இதுவரை உணர்ந்திருக்கவில்லை. சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் போர் தொடர்பான சர்வதேசச் சட்டங்களின் அடிப்படையில் இது ஒரு போர்க்குற்றமாகும்.
போர்க்குற்றங்கள்
சர்வதேச ஆயுத மோதல்கள் மற்றும் உள்நாட்டுப் போர்களைக் கட்டுப்படுத்தும் ஜெனீவா ஒப்பந்தங்களின் பொதுவான 3-வது சரத்தானது, “போரில் ஒருவரின் தனிப்பட்ட கண்ணியத்தைச் சீர்குலைப்பது, குறிப்பாக இழிவான மற்றும் அவமானகரமான முறையில் நடத்துவது” தடைசெய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிடுகின்றது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) நிலைப்பாட்டின்படி, இந்தச் சட்டம் உயிருடன் இருப்பவர்களுக்கு மட்டுமன்றி, இறந்தவர்களின் சடலங்களுக்கும் பொருந்தும். ஓர் எதிரியின் சடலத்தை ஆடைகளின்றி அல்லது கோவணத்துடன் அவமானப்படுத்தும் நோக்கில் காட்சிப்படுத்துவது இந்தச் சட்டத்தின் கீழ் போர்க்குற்றமாகக் கருதப்படும்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC) சர்வதேச மனிதாபிமான நடைமுறைச் சட்டத்தின் (Customary IHL) விதிகள், இறந்த உடல்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதைத் தெளிவாக வரையறுக்கின்றன.
விதி 113: போரில் இறந்தவர்களின் உடல்களைச் சூறையாடுவதோ (அதாவது அவர்களின் ஆடைகள், உடைமைகளைத் தேவையற்ற முறையில் களைவது) அல்லது உடல்களைச் சிதைப்பதோ முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
விதி 115: இறந்தவர்களின் உடல்கள் மரியாதைக்குரிய முறையில் கையாளப்பட வேண்டும்.
இறந்த ஒருவரின் சடலத்தில் போர்க்கருவிகள் அல்லது வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா எனச் சோதிக்க ஆடைகளை அகற்றுவது ஓர் இராணுவத் தேவையாக இருக்கலாம். ஆனால், சோதனை முடிந்த பின்னர் உடலைத் தகுந்த முறையில் மூடாமல், அவமானப்படுத்தும் நோக்கில் புகைப்படங்கள் எடுத்து, கோவணத்துடன் ஊடகங்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ காட்சிப்படுத்துவது சர்வதேச விதிகளின்படி அப்பட்டமான மீறலாகும்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) ரோம் சாசனத்தின் 8-வது சரத்து (Article
, போர்க்குற்றங்களை வகைப்படுத்துகிறது.
உள்நாட்டுப் போராக இருந்தாலும், மனித மாண்புக்கு எதிரான மீறல்கள், இறந்த உடல்களைக் கேலிப் பொருளாகவோ வெற்றிக் கோப்பையாகவோ மாற்றுதல் மற்றும் காட்சிப்படுத்துதல் ஆகியவை இதில் தண்டனைக்குரிய போர்க்குற்றங்களாக (Punishable War Crimes) வரையறுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான சம்பவங்கள்தான் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை போன்ற சர்வதேச அரங்குகளில், போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்துச் சுயாதீன விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு வலு சேர்க்கின்றன.
மஹிந்த ராஜபக்க்ஷ இத்தகைய இழிநெறியில் நின்றார்; ஆனால் பி*ர&பா^க#ர^ன் அவர்கள் ஒருபோதும் அத்தகு செயல்களில் ஈடுபடவில்லை” என இன்று உரைக்கின்றார் சரத்பொன்சேகா. ஆயினும், நெடுங்காலம் படைத்தளபதியாகவும், பல்வேறு படைத்துறைப் பொறுப்புகளிலும் செயலாற்றிய காலங்களில், சரத்பொன்சேகாவும் மஹிந்தரைப் போலவே மிகக் கொடூரமாக நடந்துகொண்டார் என்பதே காலம் உரைக்கும் வரலாற்று உண்மையாகும்.
நன்றி: எஸ்.குமரன்
