வவுனியா ஹொறவப்பொத்தானை வீதியில் பெரிய பள்ளிவாசலுக்கு அருகில் இருந்து முதியவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் நேற்று(16.04.2026) இரவு மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக நேற்று பிற்பகல் வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.
எனினும் நீண்ட நேரத்தின் பின்னரே பொலிசார் அந்தப்பகுதிக்கு வருகைதந்ததாக கூறப்படுகின்றது.
அங்கு நீண்டகாலமாக யாசகம் பெற்று வந்த முதியவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா மாநகரசபை உறுப்பினர் பர்ஸ்சான் பொலிசாருடன் இணைந்து சடலத்தை அங்கிருந்து அகற்றி வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தார்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
