முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை ( மாஞ்சோலை வைத்தியசாலையின்) கணக்காளர் மற்றும் முகாமைத்துவ உதவியாளர் கொழும்பிலிருந்து வருகை தந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று சனிக்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளனர்.
‘விநியோகஸ்தர் ஒருவரிடம் கையூட்டு பெறுவதற்கு முயற்சித்த போது குறித்த தகவல் கொழும்பு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் நேரடியாக வருகை தந்து கையும் மெய்யுமாக கைது செய்துள்ளனர்’ என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைத்தியசாலைக கணக்காளர் கைதுசெய்யப்பட்டதை உறுதிப்படுத்திய முல்லைத்தீவுப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், கைதுக்கான காரணம் இதுவரை தமக்கு உத்தியோகபூர்வமாக கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
