நேற்றுப் புதன்கிழமை (18.03.2026) இரவு-11.30 மணியளவில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிலிருந்து முல்லைத்தீவு வீதியில் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தரின் மோட்டார்ச் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டினை இழந்து வீதியிலிருந்து விலகி வீதியோரம் நின்ற மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் இரவு நண்பரொருவரைக் கொழும்பு பேரூந்தில் அனுப்பி விட்டுத் தனது வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றும் 37 வயதுடைய வவுனியாவை பிறப்பிடமாகவும் புதுக்குடியிருப்பு 2ம்வட்டாரம் கோம்பாவிலினை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகஜன் (வயது-37) என்ற இளம் குடும்பஸ்தர் ஆவார்.
