தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக தமிழீழமே அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தி பிரித்தானியாவிலிருந்து ஜெனிவா நோக்கி முன்னெடுக்கப்படும் ஈருருளிப் பயணம், இன்றைய தினம் சுவிட்சர்லாந்தை வந்தடைந்துள்ளது .
கடந்த 26.08.2026 அன்று பிரித்தானியாவில் ஆரம்பமான இப்பயணம், ஐரோப்பிய நாடுகள் ஊடாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
14ஆம் நாள் பயணமாக 09.09.2026 அன்று பிரான்ஸின் Mairie de Mulhouse, 2 Rue Pierre et Marie Curie, 68100 Mulhouse பகுதியில் இருந்து முன்னெடுக்கப்பட்ட ஈருருளிப் பயணம், தொடர்ந்து சுவிட்சர்லாந்தை நோக்கிப் பயணித்து பாசல் நகரை வந்தடைந்துள்ளது.
தமிழர் நீதிக்கான கோரிக்கையை முன்னிறுத்தி தொடரும் இப்பயணம், எதிர்வரும் 14.09.2026 அன்று ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபை முன்றலை சென்றடையும் வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது.
எம் தமிழ் உறவுகளே!
தமிழின அழிப்பற்கு உள்ளாக்கப்பட்டு நிர்க்கதியான நிலையில் ஏதிலிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்த தமிழர்களாகிய நாம் ,தம்வாழிட நாடுகளில் தமிழின அழிப்பிற்கான நீதியினை வேண்டி,எம் வாழிட நாடுகளை தமிழர்களின் நியாயமான நீதிக்கான கோரிக்கைக்கு குரல்கொடுக்க வைப்பதன் மூலம் அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் சிங்களப் பேரினவாத அரசினை நிறுத்தி தமிழின அழிப்புக்கு நீதி வேண்டும் என்பதையும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதை உறுதியாக வலியுறுத்த முடியும்.
தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்கள் கூறிய “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற உன்னத வேணவாவினை நெஞ்சிருத்தி இப்போராட்டங்களுடன் அனைவரும் இணைந்து ஓரணியாய் முரசறைவோம்.
“விடுதலைப் போராட்டத்தில் மக்கள் வெறும் பார்வையாளராக இராது, நேரடிப் பங்காளிகளாக மாறவேண்டும்.“.
-“தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன்”
“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்”





