யாழ்ப்பாணம், குடாரப்பு கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடல் நடவடிக்கையில் ஈடுபட்டு கடல் அட்டைகளை கடத்திச் சென்ற மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு கடற்படை கட்டளையின் கீழ் வெற்றிலைக்கேணி கடற்படைப் பிரிவினர் நேற்று (05) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது சந்தேகத்திற்கிடமான படகொன்று சோதனையிடப்பட்டுள்ளது.
இதன்போது, 673 கடல் அட்டைகள், ஒரு படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மன்னார் பகுதியைச் சேர்ந்த 51 மற்றும் 56 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் உள்ளிட்ட கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்பிடிப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
