பொரலஸ்கமுவ, மாலினி புளத்சிங்ஹல மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், குறித்த நபரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பொரலெஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 74 வயது முதியவர் ஆவார்.
