கொழும்பு மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமித்புர பகுதியில், 1,000 போதை மாத்திரைகளுடன் 35 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (02) மாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
