யாழ்.தென்மராட்சி பிரதேசத்தில் ஆயுதங்கள் தாங்கிய குழுவினரால் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த சம்பவங்கள் இன்று(11) அதிகாலை 1.00 மணிக்கும் 2.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ளன.
சாவகச்சேரி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஒரு வீட்டின் மீதும்,கொடிகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட 4 வீடுகள் மீதும் குறித்த ஆயுதக் குழுவினர் தாக்குதல்கள் மேற்கொண்டுள்ளனர்.
சாவகச்சேரி காவல்துறை பிரிவிலுள்ள மீசாலை மேற்கு, வங்களா வீதியிலுள்ள வீடொன்றில் புகுந்த ஆயுதக் குழுவினர் வீட்டிலிருந்த பொருட்களை அடித்துச் சேதப்படுத்தியுள்ளனர்.
மேலும், கொடிகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட மீசாலை தட்டான்குளம் வீதியில் இரண்டு வீடுகள் மீது பெற்றோல் குண்டுகள் வீசி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது வீடு முற்றாக தீக்கிரையாகியுள்ளதோடு, மினிபஸ் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் எரிக்கப்பட்டுள்ளன.
மேலும், கொடிகாமம் காவல்துறை பிரிவிலுள்ள மீசாலை வடக்கு ஞானவைரவர் வீதியிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்த குழுவினர் அங்கு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
