சாவகச்சேரி நகரசபை உப தவிசாளரின் பதவி வறிதாக்கப்பட்டமை மற்றும் நகரசபை உறுப்புரிமை நீக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில், “இது ஒரு ஜனநாயக விரோத செயற்பாடாகும்.எனவே, நாளை நடைபெறவுள்ள சாவகச்சேரி நகரசபைக்கான புதிய உபதவிசாளர் தெரிவு தொடர்பில், பாதிக்கப்பட்ட தரப்பாக உள்ள ஜனநாயக தமிழ்தேசிய கூட்டமைப்பு எடுக்கும் நிலைப்பாட்டை ஆதரித்து, தமிழ்த் தேசிய பேரவை செயற்படும்” என சுட்டிக்காட்டியுள்ளார்
