வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களுக்கும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களுக்கும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் ஊடாக நிலவும் தீவிர தென்மேற்கு பருவப்பெயர்ச்சி வானிலையின் தாக்கம் காரணமாக இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பலத்த காற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
