மேஜர் பவான்
சுந்தரலிங்கம் நாகேந்திரராசா
3ம் கொலனி, கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை.
29.12.1967 – 03.07.1990
திருகோணமலை திருமலை குமரன்கல் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரின்போது வீரச்சாவு
மேஜர் பவான்……..
திருக்கோணமலை மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றங்கள் மிக வேகமாகப் பரவிக் கொண்டிருந்த காலகட்டம் அது. சிங்கள மக்களுக்கு வேண்டிய அளவு உதவிகளை வழங்கியதுடன், ஆயுதங்களையும் வழங்கி இராணுவப் பாதுகாப்புடன் அங்கே குடியேற்றினார்கள். புதிய, புதிய சிங்களக் கிராமங்கள் எழுந்தன. மட்டக்களப்பு மாவட்டத்தையும், திருக்கோணமலை மாவட்டத்தையும் பிரிப்பதற்காக சேருவலவிலும் அதற்கு அண்டிய பகுதிகளிலும் பெருமளவில் சிங்களவரைக் குடியேற்றிக் கொண்டிருந்தார்கள்.
இக் குடியேற்றத்தின் முதுகெலும்பான அல்லை கந்தளாய் வீதியில் பலமுறை நிலக்கண்ணிகள் அதிர்ந்து விட்டன. ஆனாலும் குடியேற்றங்கள் நின்ற பாடாக இல்லை. இந்நேரத்தில் தான் ஒரு நாள், சித்தாறு எனும் கிராமத்தில் கஜேந்திரனின் தலைமையில் பவானும், அவனது தோழர்களும் காத்திருந்தார்கள். சித்தாறு தமிழ்க் கிராமந்தான்.ஆனால் இன்று ஆட்களற்று வெறுமையாக……. எங்கள் தேசத்தின் மீது தம் ஆக்கிரமிப்புப் பாதங்களை பதிப்பதற்காக வரும் எதிரிகளுக்காக அவர்கள் காத்திருந்தார்கள்.
விடிந்து சிலமணி நேரங்களின் பின்……… இராணுவ றக்வண்டி ஒன்று சேருவலவை நோக்கிவந்துகொண்டிருந்தது. உள்ளே ஆயுர் பாணிகளான சிங்கள ஊர் காவல் படையினரும், இராணுவத்தினரும் இருந்தார்கள், எல்லாமாக 72 பேர். இராணுவ வண்டிமிகநெருங் கியதும் வெடியோசை முழங்கியது, அச்சத்தம்
சேருவலலைமட்டுமல்ல 2ம்கொலனி, கல்லாறு, நீலாப்பொய, தெகிவத்தை என்று எல்லாச் சிங்கள கிராமங்களையுமே உலுக்கியது, இது எரிமலை; இங்கு அந்நியர்கள் எவரும் நிரந்தரமாகி விடமுடியாது என விளக்கியது.
இப்படித் தான். சிங்களக் குடியேற்றங்கள் பரவிய இடங்களில் எல்லாம் தாக்குதல்கள் மீண்டும் மீண்டும் நடந்தன, பல குடியேற்றக் கிராமங்கள் அகற்றப்பட்டன, ஆயுதம் தாங்கிய குடியேற்றவாசிகள் அடித்துத்துரத்தப்பட்டார்கள். அவ்விடங்கள் ஒரு யுத்தமுனையாகவே இருந்தது. அந்த மண்ணில் பிறந்து சிங்கள அக்கிரமிப்பாளர்களால் அங் கிருந்துவிரட்டப்பட்டுவிட்ட பவானும் புலிகளுடன் இணைந்து அங்கே போராடினான்.
ஆண்டாண்டு காலமாக தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த மூதுரின் தென் மேற்கு பகுதியிலிருந்து தமிழர்கள் விரட்ப்பட்டார்கள். புதிய சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு சேருவல பிரதேசம் உருவாக்கப்பட்டது. பின்பு புனிதப் பிரதேசமாக பிரகடனப் படுத்தப்பட்டது. இவ்
ஆக்கிரமிப்பினால்பல தமிழ்க்கிராமங்கள் சிங்கள மயமாகியது. சேருவலவை சுற்றி 2ம் கொலனி, சல்லாறு, நிலாப்பொல, தெகிவத்தை எனபல சிங்களக் குடி யேற்றக் கிராமங்கள் தோன்றின. இவைகட்கு மத்தியில் தான் 3ம் கொலனியும், இன்னும் சில தமிழ்க் கிராமங்களும் இருந்தன.
சுற்றிவரச் சிங்களக் குடியேற்றக் கிராமங்களுக்கு இடையே இருந்த 3ம்கொலனியில் தான் பவான் பிறந்தான். இரு மூத்த சகோதரிசுள். இவன், இரு தங்கைகள், பவான் சிறு வயதிலேயேதன் தந்தையை இழந்து விட்டான். அதன் பின் அவனது குடும்பம் வறுமையில் வாடியது.
இளவயதிலேயே பவான்தன் குடும்பச் சுமையை தாயுடன் பகிர்ந்து கொண்டான். ஏழ்மையும் பசியும் தான் அந்தக் குடும்பத்திற்குள் ஒரு பாசப்பிணைப்பினைக் கட்டி எழுப்பியது. ஒருவருக்கொருவர் பிரிக்க முடியாத பந்தம். ஏனோ தெரியவில்லை தன் அம்மாவும், தங்கைகளும் கண் கலங்குவதை அவனால் தாங்க முடிவதில்லை.
– கிராமத்து வயல் நிலங்களில் தன் தாய் வேலை செய்வதைப் பார்த்து விம்முவான். அம்மா, இனி நீ வேலை செய்யவேண்டி இராது என அவனது மனம் பேசிக்கொள்ளும்.
தன் தங்கைகளின் மேனியில் வறுமை குடியேறி அவர்களும் வேலைக்கு….. அவனால் பொறுக்க முடிவதில்லை .
அவர்களுக்க அவன் இருந்தான். எதையுமே தாங்க எதையுமே இழக்க…
ஆனால்,
1985 ல் -மூதூரின் பல தமிழ்க்கிராமங்கள் சிங்களக்காடையர்களினால் அழிக்கப்பட்டன. காலங்காலமாக தாம் வாழ்ந்த மண்ணிலிருந்து தமிழர்கள் மிருகத்தனமாகத் துரத்தப்பட்டார்கள், சிங்களக் குடிகள் மிக வேகமாகப் பரவத் தொடங்கின. 3ம் கொலனியிலும் பல தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். பல இளம் பெண்கள் ஊர் காவல் படையினரால் இழுத்துச் செல்லப்பட்டார்சள்.
எந்தவொரு மனிதனைப் பொறுத்த வரையும் அவன் வாழம் சமூகம் அவனது வாழ்வுப் பாதையை தீர்மானிக்கிறது. சாதாரணமான கிராமிய வாழ்வை வாழ விரும்பிய பவானை ஒரு போராளியாக மாற எங்கள் தேசத்தின் நிலைமைகள் நிர்ப்பந்தித்தன, தன் தாயை, தன் தங்கைகளை அவர்களை மாதிரி ஆயிரா ஆயிரம் சகோதரிகளை காப்பதற்காக அவன் ஆயுதம் ஏந்த வேண்டி இருந்தது.
பவான் ஒரு போராளியாக மாறிய பின்பு தன்மண்ணை மீட்பதற்காக இரவு பகலாகச் செயற்பட்டான், அவனும் அவனது தோழர்களும் – தொடர்ந்து இடைவிடாத தாக்குதல்களின் மூலம் சிங்கள ஆக்கி ரமிப்பாளர்களை நிம்மதியாக. அமைதியாக வாழவிடவில்லை. ஆனால் ஒரு திட்டமிடப்பட்ட பெருங்குடியேற்றத் திட்டத்திற்கெதிராகவும் அதன் வலுவான பாதுகாப்பு இராணுவத்திற்கெதிராகவும் அவர்கள் போராடவேண்டி இருந்தது. சிங்கள குடியேற்றவாதிகளின் மத்தியில் நிச்சயமற்ற வாழ்வு முறையை ஏற்படுத்தி அவர்களை வெளியேற்ற வேண்டி இருந்தது. எம்மவர்கள் நடாத்திய ஒவ்வொரு தாக்குதல்களும் ஒரு சிங்களக் கிராமத்தை அகற்றி இருக்கும். அல்லது ஒரு புதிய குடியேற்றத்தை நிறுத்திஇருக்கும்.
1986 பவான், மேஜர் கணேஸ் அண்ணனுடன் இணைந்து சிறீலங்கா படையினருக் கெதிரான பல தாக்குதல்களில் கலந்து கொண்டான். கடவான வீதியில் கடற்படையினரின்ட்றக் வண்டி மீதான கண்ணிவெடித் தாக்குதலும், எமது காவலைமறி கட்டைப் பறிச்சான் பகுதிக்குள் நழைய முயன்ற சிறீலங்கா இராணுவத்தினரை விரட்டியடித்த 5 நாள் யுத்தத்திலும் இவன் மேஜர்கணேசுடன் இணைந்து கொண்டான். அதன் பின்பு மேஜர் கஜேந்திரனுடன் இணைந்து பல தாக்குதல்களில் பங்குபற்றினான்.
காலம் அவனை ஒரு பொறுப்பு வாய்ந்த தளபதியாக வளர்த்தது. முதலில் ஒரு தாக்குதல் அணிக்கு தலைமை வகித்துக்கொன்டான். அக்காலத்தில் (1987) 3ம் கொலனியில் சிறிலங்கா படையினர் மீது தாக்குதலை நடாத்தி இரு ஆயுதங்களையும், திருகோணமலையில் சிறிலங்கா இராணுவத்தினர்மீது தாக்குதலை நடாத்தி இரு ஆயுதங்களையும் கைப்பற்றினான்.
அப்பொழுதெல்லாம், ஆட்களற்று வெறிச்சோடிப்போன அவனது கிராமத்தின் வீதிகளில் நடக்கையில் அவன் கூறுவான்,
“மச்சான்! இந்த மண்ணில் தான் நான் பிறந்தனான்,”
இந்த, வயலில் தான்நான் விதைச்சனான்” அவனது கண்களும் கைகளும் அவற்றை நோக்கி நீளும்.
“ ஆனால், எனக்கு ஒரு ஆசை, இந்த விடுதலைப் போராட்டத்தில நான் சாகிறதாக இருந்தால் – இந்த மண்ணில் தான் ஒரு சண்டையில சாகவேணும்.”
இப்படித்தான், எங்கள் போராளிகளின் கனவுகளும் வித்தியாசமானவை. ஏனெனில் அவர்கள் இழப்புக்களையும் சாவையும் நெஞ்சில் நிறுத்திப் போராடும் உன்னதமான – போராளிகள்
வரலாற்றில், எங்கள் விடுதலைப் போராட்டத்தில் ஒரு மாறுதல் நிலை. எங்கள் சுதந்திரத்தை நாம் வென்றெடுப்பதற்காக இந்தியப் படைகளிற்கெதிராகவும் நாம் போராட வேண்டி இருந்தது.
பவானும் பல முனைகளில் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்திற் செதிரான தாக்குதல்களை நடத்தினான். இதில் 1988 இலும் 1989இலும் 3ம் கொலனியில் நடாத்திய தாக்குதல்கள் குறிப்பிடக்கூடியவை. 1989 இல் நடந்த தாக்குதலில் இரு இந்திய சிப்பாய்களை கொன்று அவர்களது இரு ஆயுதங்சளையும் கைப்பற்றினான்
1989 சித்திரையில் பவான் மூதூர் பிரதேச தளபதியாக நியமிக்கப்பட்டான். பின்பு தம்பலகாமப் பகுதிக்கு மாற்றலாகி அங்கும் பல தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொனடான்.
தம்பலகாமத்தில – 1989 மாவீரர் நாள் விழாவை தேசத் துரோகிகள் இந்திய படையுடன் இணைந்து கலைக்க முயற்சிக்கையில் இரு தேசத்துரோகிகளை கொன்று அவர்களது ஆயுதங்களையும், நான்கு நாட்களின் பின்பு அதேஇடத்தில் ஒரு இந்திய இராணுவ கப்டனை கொன்று அவனது ஆயுதத்தையும் கைப்பற்றினான், திருக்கோணமலையில் இந்தியப்படைகள் தம் இறுதித் தாக்குதலையும் இவனது அணிமீதே நடத்தினர். சூரங்கல்லில் நடந்த இந்த மோதலில் – இந்தியப் படை பலத்த இழப்பைக் கண்டது.
அம்மோதலில் எமது தரப்பில் திலகர் என்ற வீரவேங்கை வீரமரணமடைந்தான்.
தமிழீழத்தை ஆக்கிரமித்திருந்த இந்தியப் படைகள் விலகியபின் – சிறிலங்காவின் படைகள் தம் பயங்கரவா தத்தை மீண்டும் தொடங்கிய நேரம், தமிழீழமெங்கும் பலத்த எதிர்ப்பினை சிறீலங்கா படைகள சந்தித்தனர். பவானும் தனது தோழர்களுடன் இணைந்து பல இடங்களில் இராணுவத்தினருக்கு எதிராகப் போரிட்டான்.
கிண்ணியா பொலிஸ் நிலையம், இராணுவமுகாம், தம்பலகாமத்திற்குள் நுழையும் இராணுவச்தினருடன்… என போர்கள் தொடர்ந்தன
எமது முற்று கையிலிருத்து மூதார் இராணுவ முகாமை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த சிறீலங்கா இராணுவ கொமாண்டே படையின் முதலாம் அணியை கட்டைப்பறிச்சான் பாலத்தடியில் மறித்து எம்மவர்கள் தாக்குதல் நடாத்தியபோது அத்தாக்குசலில் பவான் பாலத்தின் ஒரு பகுதிக்கு பொறுப்பாக தாக்குதற் குழுவிற்கு தலைமை வகித்து, தன் சகதோழர்களை உற்சாகப்படுத்தி, இயக்கி அந்தாக்குதலின் வெற்றிக்கு, வழி வகுத்தான். அத்தாக்குதலில் 62 இராணுவத்தினர் கொல்லப்பட்டு, பெருமளவிலான ஆயுதங்களும், கைப்பற்றப்பட்டன. அத்தாக்குதலின் போது அவனது வழிநடத்தல், தோழர்கள் மீது அவன் காட்டியபற்று, அவனது திறமை அனைத்தையுமே அத்தாக்குதலில் பங்குபற்றிய அவனது தோழர்கள் இன்றும் நினைவு கூர்வார்கள். அவனது சாதனகள் தொடர்ந்தன.
இறுதியில் – 3.7.1990
தம்பலசாமப் பகுதியிலிருந்து கிண்ணியாவிற்கு முன்னேறிய சிறீலங்கா இராணு வத்தினரை சூரங்கல் பகுதியில் பவானின் தலைமையில் எம்மவர்கள் இடைமறித்துத் தாக்கினார்கள். அத்தாக்கு தலில் வேறொரு பகுதியில் போரிட்டுக் கொன்டிருந்த தோழனின் உதவிக்காக விரைந்த பவானின் நெஞ்சில் எதிரியின் குண்டுகள் பதிந்தான்
எங்கள் தேசத்தின் மீது தமது கால்களைப்பதித்த, மிகக் கொடுமையான எதிரிகளை வீழ்த்தி அவர்களது ஆயுதங்களையும் கைப்பற்றிய பின்பு – மேஜர் பவான் வீரச்சாவு தழுவிக் கொண்டான். மேஜர் பவானுடன், ரஜனி, பல்லவன் என்ற இளம் புலிகள் இருவரும் வீரமரணத்தைத் தழுவிக் கொண்டனர்.அவனுடைய விருப்பப்படி அவனுடைய வீரச்சாவு மூதூர் மண்ணில் இல்லைத்தான் – என்றாலும் தமிழ் மண்ணில்.
-விடுதலைப் புலிகள் இதழ்
நன்றி :-
தமிழீழ ஆவணக்காப்பகம்
