செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 20ஆம் நாளான இன்று (09) எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 8 சிறுவர்களுடைய எச்சங்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு எலும்புக்கூட்டின் மீது இருந்து நாணயக் குற்றி ஒன்று சான்று பொருளாக மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேலும் ஒரு சிசுவின் எலும்புக்கூடு உட்பட 9 எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதுவரை மொத்தமாக 327 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 311 எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
