கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி தர்மபுரம் புன்னைநீராவி – நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் கடைச்சல் தொழிலகத்தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தொழிலகத்தில் இளைஞன் வேலை செய்து கொண்டிருந்த வேளை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி நகரைச் சேர்ந்த சிவகுருநாதன் சாரங்கன் (வயது 23) என்ற இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் .
