1982 மே 2 ஆம் திகதி, யாழ்ப்பாணம் நெடுந்தீவில் பிறந்தவர் இசைப்பிரியா. இவரது பெற்றோர் தர்மராஜா, வேதரஞ்சினி. இவர்களின் நான்காவது மகளாகப் பிறந்த இவரது இயற்பெயர் சோபனா.
பின்னர் தமிழீழ விடுதலைப் பு லிகளின் ஊடகத் துறையில் தன்னை இணைத்துக் கொண்டார். தொலைக்காட்சியில் செய்திகளைத் தொகுத்து வாசித்து, தனது குரலால் மக்களின் கவனத்தை ஈர்த்தார். ஈழத் தமிழர்களின் உரிமைகளை கவிதை வடிவிலும் செய்தி வெளிப்பாட்டிலும் மக்களின் மனதில் ஆழமாக பதியச் செய்தார். அவரது கனீர் நிறைந்த இனிமையான குரலும், அழகான தோற்றமும் அனைவரின் மனதிலும் நிலைத்துவிட்டது.
“ஈழத் தமிழர்களின் மனதில் என்றும் அழியாத ஓர் ஒலியாகி, நினைவின் நெஞ்சில் நிழலாகி,
உயிரின் உச்சியில் ஒளியாகி—
நீ குடி கொண்டாய்.
காலம் கடந்து சென்றாலும்,
காற்றின் சுவாசத்தில் உன் பெயர்,
கண்ணீரின் துளியில் உன் முகம்,
இதயத்தின் துடிப்பில் உன் நினைவு—நித்தமும் நிலைத்ததே.
ஈழம் அழைத்திடும் ஒவ்வொரு நொடியிலும்,
உன் குரல் மறுபடியும் உயிர் பெறுகிறது.
மண்ணின் மணத்தில் நீ வாழ்கிறாய்,
மக்களின் மனதில் நீ என்றும் நிலைக்கிறாய்.”
இசைப்பிரியா என்ற அழகிய குரல் வீணை துயரமாக நொறுங்கியது. ஆறாத காயங்களின் அழியாத வடுக்களாக ஈழத் தமிழர்களின் நெஞ்சங்களில் அவள் நினைவு நிலைத்திருக்கிறது.
சிங்கள இனவாத அரசால் 2009 முள்ளிவாய்க்காலில் நடந்த தமிழினவழிப்பின் போது, சிங்கள காடையர்களால் வன்கொ டுமை செய்யப்பட்டு படுகொ லை செய்யப்பட்ட, சகோதரியை நாம் என்றும் மறவோம். இவருடைய மறைவு ஈழத் தமிழர் வரலாற்றில் ஆழ்ந்த துயரமாக பதிந்துள்ளது.
அவரது நினைவை நாம் என்றும் மறவோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
