யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் பாயும் புலிகளின் உருவங்கள் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட காட்சிகள் அனைவரினதும் அவதானத்தை பெற்றுள்ளன.
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழா ஏப்ரல் 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
நேற்றைய (23) வேட்டைத் திருவிழா உற்சவத்தில், அம்பாள் வேட்டைக்குச் செல்லும் நிகழ்வை நினைவூட்டும் வகையில், புலிகளின் உருவங்கள் தத்ரூபமாக, வர்ண மின்விளக்குகள் மற்றும் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட காட்சிகள் பலரையும் கவர்ந்துள்ளது.
இந்திரவிழா என்ற பிரம்மாண்டமான கலாச்சார நிகழ்வு உட்பட பிரபலமான திருவிழாக்கள் நடக்கும் இந்த ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளான தீர்த்தத் திருவிழா எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ள நிலையில் திருவிழாவின் இரவு இந்திரவிழா கொண்டாடப்படுவது வழமையாகும்.
யாழ்ப்பாணத்திலுள்ள வல்வெட்டித்துறை விடுதலைப்புலிகளின் தலைவரின் பூர்வீக இடமென்பது குறிப்பிடத்தக்கது.
