கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜெயபுரம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் தரம் 11 மாணவி அக்சயா உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இளம் வயதில் கல்வியில் முன்னேற்றம் கண்டுவரும் மாணவியின் திடீர் மரணம், குடும்பத்தினரும், நண்பர்களும், ஆசிரியர்களும் உட்பட அனைவரையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அக்சயாவின் இன்முகம், எப்போதும் சிரிப்புடன் பழகும் தன்மை மற்றும் நண்பர்களுடன் இணைந்து கலந்துரையாடும் இயல்பு ஆகியவை அனைவரின் நினைவிலும் நிலைத்து நிற்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துவருகின்றனர். “மனம் ஏற்க முடியாத இழப்பு” எனக் கூறி பலரும் துயரத்தை பகிர்ந்து வருகின்றனர்.
இதனிடையே, இச்சம்பவம் இளைஞர்களின் மனநல பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறது. நிபுணர்கள் தெரிவிப்பதாவது, “எந்த சிரமத்திற்கும் தற்*கொலை தீர்வல்ல. சிக்கல்கள் ஏற்பட்டால், நம்பகமான குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது ஆசிரியர்களுடன் பகிர்ந்து பேசுவது மிகவும் அவசியம்” என்பதாகும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
