யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் ஒன்று 21 இரவு 7.00மணியளவில் பரந்தன் சந்திக்கு அண்மையில் விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
வீதியை குறுக்காக கடக்க முற்பட்ட முதியவர் மீது மோதியே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் 55வயதான புன்னைநீராவி கண்ணகிநகர் சேர்ந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இறந்தவரின் சடலம் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது
