கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலைக்குடா களப்பில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை (09) இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் கொக்கட்டிச்சோலை – முனைக்காடு பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மீன்பிடிக்கச் சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலம் மீட்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
