சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஜீத்புரம் பகுதியில் நேற்று புதன்கிழமை (08) காலை காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மல்வத்தை 03, மஜீத்புரம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
