அமெரிக்கா, இஸ்ரேலுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர, சர்வதேச மத்தியஸ்தர்களால் முன்வைக்கப்பட்ட விடயங்களுக்க ஈரான் தனது பதிலை தயார் செய்துள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் இஸ்மாயில் பாகேய் தெரவித்துள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மத்தியஸ்தர்கள் ஊடாக அமெரிக்காவினால் வழங்கப்பட்ட சமாதானத் திட்டம் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என ஈரான் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது.
“எமது நாட்டின் நலன்கள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் எமது சொந்தத் தேவைகளை நாங்கள் தொகுத்துள்ளோம்” என பாகேய் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் பதில்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்த விரிவான தகவல்கள் பொருத்தமான நேரத்தில் வெளியிடப்படும் என ஈரானிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
