மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் இருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், இரண்டு முச்சக்கர வண்டிகள், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கைதுசெய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பில் நடைபெற்ற பல்வேறு கொள்ளை சம்பவங்களுடனும் தொடர்பு கொண்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திடுக்கிடும் பின்னணி – சந்தேக நபர்கள் கைது!
கடந்த சில வாரங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வந்த திட்டமிட்ட கொள்ளை மற்றும் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கிழக்கு மாகாண குற்றப் பிரிவினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
