பூநகரி, சென்மன்குண்டு பகுதியில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்தார்
தமது பயிர் நிலத்தை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் வேலியில் சிக்கியதாலேயே அவருக்கு மின்சாரம் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மின்சாரம் தாக்கிய குறித்த நபர் பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் சென்மன்குண்டு பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பாக பூநகரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

