சவுதி தளத்தில் நின்ற அமெரிக்காவின் ஐந்து எரிபொருள் நிரப்பு விமானங்கள் ஈரானின் ஏவுகணை தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக Wall Street Journal நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இரண்டு அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமான தளத்தில் ஐந்து அமெரிக்க விமானப்படை எரிபொருள் நிரப்பும் விமானங்கள் தரித்து நின்றவேளை ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அவை சேதமடைந்துள்ளன. ஆனால் முழுமையாக அழிக்கப்படவில்லை.
மேலும் அவை சரிசெய்யப்பட்டு வருகின்றன என்று Wall Street Journalகூறியது, தாக்குதல்களில் யாரும் கொல்லப்படவில்லை என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
