கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக ‘குஷ்’ போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலைய பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (14) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் 63 வயதுடைய குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது அவரிடமிருந்து 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான 6 கிலோ 180 கிராம் குஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த போதைப்பொருளுடன் சந்தேக நபரான பெண்ணிடம் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலைய பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
