முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, ஜூலை 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான உத்தரவை கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளார்.
இரண்டு அரசாங்க நிறுவனங்களிடமிருந்து சம்பளம் பெற்றது தொடர்பான ஒரு சம்பவம் குறித்த விசாரணையின் தொடர்பில் அவர் இன்று காலை (18) கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
