தனியார் படகு மூலம் நயினாதீவில் இருந்து புங்குடுதீவு குறிகாட்டுவான் இறங்கு துறை நோக்கி செல்லும் போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை அதிபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
நயினாதீவு 06 வட்டாரத்தை சேர்ந்தவரும் நயினாதீவு சிறிகணேசா வித்தியால அதிபரும்இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான நடராசா மயூரன் (வயது – 48) என்பவரே நீரில் மூழ்கி இன்று (28) மாலை உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் மீட்பு
குறித்த அதிபர் புங்குடுதீவு பாடசாலையிலிருந்து அண்மையில் நயினாதீவு சிறிகணேச வித்தியாலய அதிபராக பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.
