தரவைக்குளம் சிங்கள பேரினவாத படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீர காவியமான லெப்.கேணல் வினோதன் உட்பட ஏனைய மாவீரர்களின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
27.05.1995 அன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் குடும்பிமலை தரவைக்குளம் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டது. இதன்போது 40 வரையான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதுடன் பெருமளவான படையினர் காயங்களுடன் காடுகளிற்குள் தப்பியோடினர்.
இரு ரி.81 ரக மோட்டார்கள், இரு ரி.60 ரக மோட்டார்கள் உட்பட பெருமளவு ஆயுத தளபாடங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.
இந்த வெற்றிகரத் தாக்குதலின்போது தாக்குதலை வழிநடாத்திய தளபதி லெப்.கேணல் வினோதன் உட்பட போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
அவர்களின் விபரம் வருமாறு
லெப்.கேணல் வினோதன்
தம்பிப்பிள்ளை பத்மநாதன்
பழுகாமம், பெரியபோரதீவு
மட்டக்களப்பு
மேஜர் கோமகன்
அந்தோனிப்பிள்ளை யோகராசா
கொம்மாதுறை, செங்கலடி
மட்டக்களப்பு
கப்டன் பிரதீபன் (ஜேம்ஸ்)
காசுபதி முரசொலிமாறன்
கிரான்
மட்டக்களப்பு
கப்டன் ராஜபாலன் (குகதீஸ்)
பொன்னம்பலம் பாபு
2ம் குறிச்சி, தம்பிலுவில்
அம்பாறை
லெப்டினன்ட் சத்தியராஜ் (சத்தியவான்)
வீரையா சிவகுமார்
78ம் கட்டை, கோப்பாய்வெளி
மட்டக்களப்பு
லெப்டினன்ட் அலோகீதன்
தம்பியையா வாமதேவன்
நற்பிட்டிமுனை, கல்முனை
அம்பாறை
லெப்டினன்ட் திலகராஜ்
பாக்கியராசா சுவேந்திரன்
பெரியபோரதீவு
மட்டக்களப்பு
2ம் லெப்டினன்ட் ரகுவரன்
காத்தமுத்து மயில்வாகனம்
சந்திவெளி
மட்டக்களப்பு
2ம் லெப்டினன்ட் சுயரூபன் (ரட்ணம்)
சின்னத்தம்பி சிவலிங்கம்
சொறிவில், மன்னம்பிட்டி
பொலநறுவை
2ம் லெப்டினன்ட் மாந்தீபன் (சிவானந்தம்)
மாணிக்கம்பிள்ளை சிவானந்தம்
முனைக்காடு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
2ம் லெப்டினன்ட் மன்மோகன்
கதிர்காமப்போடி பகீரதன்
மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
2ம் லெப்டினன்ட் சர்வமாறன் (லிங்கநாதன்)
நாகாண்டப்போடி கோவேந்திரராஜா
அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
2ம் லெப்டினன்ட் சுவேந்திரன்
சாமித்தம்பி வீரக்குட்டி
மண்டூர்
மட்டக்களப்பு
2ம் லெப்டினன்ட் ஈழக்குமரன் (இளங்குமரன்)
தங்கராசா சின்னராசா
பாற்சேனை, கதிரவெளி
மட்டக்களப்பு
2ம் லெப்டினன்ட் சஞ்சீவி
வேலுச்சாமி ஜெயசீலன்
களுவன்கேணி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
2ம் லெப்டினன்ட் மாணிக்கபதி (விஜிகரன்)
கிருஸ்ணபிள்ளை கேதாரலிங்கம்
மகிழவெட்டுவான், ஆயித்தியமலை
மட்டக்களப்பு
2ம் லெப்டினன்ட் கலாநிதி
அழகையா ரவிந்திரன்
மகிழடித்தீவு
மட்டக்களப்பு
2ம் லெப்டினன்ட் நாதகோபால்
முத்துக்கிருஸ்ணன் விஸ்ணுவர்த்தன்
பாண்டிருப்பு, கல்முனை
அம்பாறை
இவர்களுடன் இத்தாக்குதலில் விழுப்புண்ணடைந்து 29.05.1995 அன்று
வீரவேங்கை கலைநேசன் (வில்வம்)
மூத்ததம்பி செல்வரத்தினம்
5ம் வட்டராம், ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரவேங்கை அழகுராஜ்
மோகனசுந்தரம் ராஜனிகாந்
இராசதுரை கிராமம், ஆரையம்பதி
மட்டக்களப்பு
ஆகிய போராளிகளும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
