முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17-ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, சிங்களப் பேரினவாத அரசினால் படுகொலை செய்யப்பட்ட இலட்சக்கணக்கான தமிழ் மக்களை நினைவுகூரும் “தமிழின அழிப்பு நினைவு ஊர்திப் பவனி” தற்போது தமிழீழத்தில் உணர்வுப்பூர்வமாகப் பயணித்து வருகின்றது.
திலீபன் நினைவிடத்திலிருந்து தொடக்கம்கடந்த மே 12, 2026 அன்று யாழ்ப்பாணம் – நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் நினைவிடத்திலிருந்து இந்த ஊர்திப் பவனி உத்தியோகபூர்வமாகத் தொடங்கியது. தமிழின அழிப்பின் கோர முகத்தையும், வலிகளையும் தாங்கிய நினைவுச்சின்னங்களை ஏந்தியவாறு புறப்பட்ட இந்த ஊர்தி இன்று மல்லாவியில் மக்களின் வணக்கத்திற்காக பயனித்துக்கொண்டுள்ளது









