மோட்டார் சைசைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிடிகல – பெலவத்தை வீதியின் கரவ்வ 15ஆம் கட்டை பகுதியில் குறித்த சம்பவம் இடம்பற்றுள்ளது.
மேல் ஹேவெஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த 21 வயதுடைய இளைஞர் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பிடிகல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த இளைஞர், கடந்த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்த ஒருவராவார்.
நேற்று (13) நிலவிய பலத்த மழைக்கு மத்தியில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த போதே இவர் இந்த விபத்துக்குள்ளாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிடிகல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
