முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பில் சிங்கள பேரினவாத அரசினால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவுகூரும் வகையில், “தமிழின அழிப்பு நினைவு ஊர்திப் பவனி” ஆரம்பமாகியது.
குறித்த ஊர்திப்பவனியனது தமிழின அழிப்பு நினைவுச்சின்னங்களைத் தாங்கி நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவிடத்திலிருந்து மக்களின் வணக்கத்திற்காகப் புறப்பட்டது.




