அன்புவின் வீடு எங்கஇருக்கு….வீதியால் வந்தவர்களிடம் வழிகேட்ட போது…
எந்த அன்பு…. கடற்கரும்புலி லெப்.கேணல் அந்த அன்புவையாகேக்கிறீங்கள்.”ஓமோம்” அந்த
அன்புதான்.வாங்கோ…. வீடுகாட்டுறன். வழிகாட்டியாய்வந்தவர் முன்னே நடக்க நாங்கள் பின்னே நடந்தோம்.
நினைத்ததை முடித்தவள்…அது நெய்தல் நிலம்….கடற்கரையோடு அண்டிய அழகான ஊர்… எங்கும்
வெண்மணற் திட்டுக்கள். அந்தமணலில் கால்புதையநடப்பதில் கூட ஒரு நலம்
இருந்தது.”இதுதான் வீடு”வந்தவர் காட்டினார். நாங்கள் உள்ளே நுழையவும் தமிழர் களின் பண்பாட்டுக்கு உரிய “வரவேற்பு” அங்கு அதிக மாகவே இருந்தது.எங்கிருந்தோ சாம்பிராணிப் புகை மணத்தது. பத்திக்
குச்சியின் நறுமணம்…எங்கேயோ கோயிலுக்குள்நுழைவது போன்ற உணர்வு…அந்த இடத்திற்குத்தான்
எங்களை உட்கார வைப்பதற்காக அழைத்துச் சென்றார்கள். காலடியெடுத்துவைத்துவிட்டு நிமிர்ந்து பார்த்தேன். அங்கே, ஆறடிஉயரக் கண்ணாடிச் சட்டத்துக் குள் இருந்து அன்பு சிரித்துக் கொண்டிருந்தாள். “சாமியறை” என்று சொல்லப்படும் அந்த அறை முழுவதும் அன்புவின் நிழற் படங்களே இருந்தன. நாங்கள் அதைப் பார்த்து வியந்து நிற்க அப்பாசொன்னார், “பிள்ளையள்,
நாங்கள் கையெடுத்துக்கும்பிடுற கண்கண்ட காவல் தெய்வங்கள் எங்கட மாவீரச் செல்வங்கள் தான்… அதில இப்ப என்ர பிள்ளையும் ஓராள்….” அப்பா மிகத்தெளிவாகப் பதிலுரைத்தார்.
எங்களைக்கண்டவுடன் கையில் செய்திருந்த வேலையைப் போட்டு விட்டு அம்மாவும் ஓடி வந்தா… “பிள்ளையள் என்னசாப்பிடுறியள்….” விருந்தோம்பல் பண்பு அம்மாவிடம் இருந்தது.”பிள்ளையளுக்கு
என்ன பெயர்…” எனக் கேட்ட அம்மாவின் விழிகள் கலங்கின. அதற்கு அம்மாவே காரணமும் சொன்னாள். “அன்புக்கு அழுகிறதெண்டாப் பிடிக்காது… வீட்டுக்கு வாற பிள்ளையளோட வடிவாக்கதைக்க வேணும். அவர்
களுக்கு விருப்பமானசாப்பாடுகள் உடன செய்துகொடுக்க வேணும்… அவர் களின்ர பெயரக் கேட்டு
வைக்கவேணும்….. அந்தப் பெயர்கள ஒருக்காலும் மறக்கக்கூடாது. அம்மா கதைத்துக்கொண்டு இருந்த போதே அம்மம்மா வந்துவிட்டா…அன்புக்கு அம்மம்மா என்றால்சரியான விருப்பம். அன்பு அடிக்கடி அம்மம்மாவைப்’ பற்றிப் பாசறையில் கதைப் பதை நாங்கள் கேள்விப் பட்டிருக்கின்றோம். அம்மம்மாவும் இயல்பான நல உசாவல் களோடு பேச்சைத் தொடக் கினார். அன்புக்கு ஒரு அண்ணன் இரண்டு தம்பி அன்பு மட்டும் தான் பெண் பிள்ளை. சின்னனில இருந்து நல்ல கெட்டிக்காரி படிப்பில சரி விளையாட்டில சரி… அவள வெல்ல யாராலும் முடியாது… தான் நினைச்சதைச் செய்ய வேண்டும் என்ற துணிச்சல் காரி…. அம்மம்மாவின் நினைவு கள் விரிந்தன. அன்பு சின்னப் பிள்ளையா இருக்கேக்க ஒருநாள் வெற்றிலைக்கேணி கடலில தொழிலுக்குப்போன நிறையச் சனத்த சிறிலங்காக் கடற்படை படுகொலை செய்து போட்டாங்கள்… அடுத்தடுத்த நாள் வெற்றிலைக்கேணி கடலில் எங்கட சனத்தின்ர ஊடலங்கள் ஊதி விறைச்சுப் போய் மீனெல்லாம் கொத்தி உருத்தெரியாம கரையொதுங் கிச்சுது. சனமெல்லாம் அழுது குழறிக்கொண்டு கடற்கரைக்கு ஓட நானும் போக வெளிக்கிட தானும் வரப்போறன் எண்டு எனக்குப் பின்னால் ஓடி வந்திட்டாள். அப்ப அவளுக்கு ஆறு, ஏழு வயசுதான் வரும். நான் சின்னப்பிள்ளை பயப்படப் போறாள் எண்டு நினைக்க, அவள் என்னட்டக் கேட்டாள், “யாரம்மம்மா இவையச் சுட்டது…” “இந்தப் பாழாய்ப்போன சிங்களக்
கடற்படைதான்…” எனநான்சொன்னன். அதற்கு அவள் சொன்னாள். “அம்மம்மா… நான்வளர்ந்து பெரியாளா
வந்தேன்னா இந்தச் சிங்களக்கடற்படைய இந்தக் கடலில வைச்சுத்தான் அடிப்பன்….” அப்போது அவள் சொன்னதை நான் பெரிசா எடுக்கவில்லை. ஆனா இப்ப…. அம்மம்மாவின் வழிகள் கலங்கின.கடைசியா நான் வீட்டில் இருக்கேக்க “கடற் புலிகள் சண்டைக்கு வெளிக் கிடுறாங்கள்…” என்ற செய்தி என்ர காதில விழுந்திச்சு. சனமெல்லாம் கடற்புலிகள் வழியனுப்பக் கடற்கரைக்குப் போச்சினம்…அப்ப நானும் போனன்.. என் கண்ணுக்கு என்ர குஞ்சத் தெரியேல்ல… ஆனா… என்ர குஞ்சு என்ன வடிவாக் கண்டிருக்கும். கடலில் இருந்து அவர்கள் கைகாட்ட கரையில இருந்து நாங்களும் கைகாட்டினம். என்ர குஞ்சு மகிழ்வோட அத ஏற்றுக் கொண்டு போயிருப்பாள். சில மணித்துளிகள்… வெற்றிலைக்கேணிக் கடற்பரப் பில பெரும் வெடியோசை யோட ஓர் ஒளிப்பிழம்பு… “கரும்புலி வெடிச்சிட்டு…” மக்கள் ஆரவாரம் செய்தார்கள். “யார் பெற்ற பிள்ளையோ…” என்ர மனம் கனத்தது… வீட்ட போயும் மனம் சரியில்ல… பிறகுதான் செய்தி வந்திச்சு என்ர குஞ்சும் அதில் ஓராள் என்று. பல ஆண்டுகளுக்கு முதல் அவள் எனக்குச் சொன்னத இப்ப செயலில… அதுவும் அதே கடற்பரப்பில… அதே கரையில அவள் சொல்லுக்குச் சாட்சியாய் நான் நிற்க என்ர குஞ்சு தான் நினைச்சதை முடிச்சிட்டாள்… அம்மம்மாவின் குரல் தழுதழுத் தாலும், இப்போது பெருமையோடு பேசிக்கொள்கின்றாள்.
