கிளிநொச்சி, குமாரபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத நிலையில் மர்மமான முறையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி, குமாரபுரம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட சுட்டத்தீவு கோவில் அருகேயுள்ள வனப்பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக நேற்று (18) இரவு 8:25 மணியளவில் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்த நிலையில்
கிளிநொச்சி தலைமைப் பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
