நாடாளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இளவாலை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமது தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை காட்டி பெண் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், இன்று (27) இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு வாக்கு மூலம் அளிக்க அர்ச்சுனா இராமநாதனை அழைத்து, வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர், அவரை கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம், இளவாலை – பெரியவிளான் பகுதியில் அர்ச்சுனாவுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
