மட்டக்களப்பு – திராய்மடு கிராமத்தில் நீண்டகாலமாக நடைபெறும் சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் விற்பனையை இல்லாது ஒழிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
லெப்டினன்ட் பண்பினியன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்
மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (03) மாலை 5.00 மணியளவில் திராய்மடுவில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள், இந்த சட்டவிரோத மதுபான விற்பனையால் சிறுவர்களின் கல்வி பாதிக்கப்படுவதுடன் இந்த வியாபாரத்தை முற்றாக காவல்துறையினர் ஒழிக்க வேண்டும்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரான்ஸ் தொழிலதிபர் விபத்தில் பலி!
சட்டவிரோத வியாபாரிகளுடன் சில காவல்துறையினருக்கு தொடர்பு உள்ளது. இதற்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோத கசிப்பு வியாபாரத்தால் கிராமமே அழியும். சர்வதேச மது ஒழிப்பு தினமான இன்று சட்டவிரோத மதுபான விற்பனையில் இருந்து எமது கிராமத்தை பாதுகாத்து தரவும்.
சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகள் இரவில் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பெண்கள் கைகளை பிடித்து இழுத்து ஒரு இலட்சம் தருவதாக அட்காசம் புரிந்து வருகின்றனர்.
இவ்வாறான சட்டவிரோத செயற்பாடு தொடர்பாக கொக்குவில் காவல்துறையினருக்கு முறைப்பாடு தெரிவித்தும் காவல்துறையினர் கசிப்பு வியாபாரி மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை.” என சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே சட்டவிரோத மதுபான வியாபாரிகள் மற்றும் அதற்கு உடந்தையாக இருக்கும் காவல்துறையினரிடம் இருந்து இந்த கிராமத்தை ஜனாதிபதி பாதுகாத்து தருமாறு கோஷங்கள் எழுப்பி சுலோகங்கள் ஏந்தியவாறு ஒரு மணித்தியாலம் வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
