திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் கித்துல்உத்துவ பகுதியில் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அக்போபுர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
லெப்டினன்ட் பண்பினியன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்
கந்தளாய் பகுதியில் இருந்து ஹபரணை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி, வீதியின் வலதுபுறத்தில் அமைந்திருந்த வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் செல்வதற்காக திடீரென திரும்பியபோது, எதிர்திசையில் ஹபரணை பகுதியிலிருந்து வந்த சிற்றூர்தியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளதுடன், அதில் பயணித்த மற்றொருவர் காயமடைந்து கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் கித்துல்உத்துவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும், சிற்றூர்தியில் பயணித்தவர்கள் ஹபரணை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
