சுவிட்சர்லாந்தில் பணியாற்றிவரும் மருத்துவர்களில் கால் பங்கு மருத்துவர்கள் ஓய்வுபெறும் வயதை எட்டிவிட்டார்கள்.
அவர்கள் ஓய்வு பெறும் நிலையில், சுவிட்சர்லாந்தில் மருத்துவர் பற்றாக்குறை உருவாகக்கூடும் என சுவிஸ் மருத்துவ கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.சுவிட்சர்லாந்தில் சுமார் கால் பங்கு மருத்துவர்கள் 60 வயதும் அதற்கு மேலும் உள்ளவர்கள். அப்படியானால், விரைவில் பெரும் எண்ணிக்கையிலான மருத்துவர்கள் ஓய்வு பெற இருக்கிறார்கள் என்று பொருள் என்கிறது சுவிஸ் மருத்துவ கூட்டமைப்பு. இப்படி சுவிட்சர்லாந்தில் மருத்துவர் பற்றாக்குறை உள்ளதால் வெளிநாட்டு மருத்துவர்கள் சுவிட்சர்லாந்தில் பணி புரிய விரும்புவது இயற்கை.
விடயம் என்னவென்றால், வெளிநாட்டு மருத்துவர்கள் சுவிட்சர்லாந்தில் மருத்துவம் செய்ய, அவர்களுடைய பட்டயப்படிப்புக்கு அங்கீகாரம் கிடைக்க, அவர்கள் பல மாதங்கள் காத்திருக்கவேண்டும்!
