முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட கள்ளியடி பகுதியில் உள்ள பேராற்றில் நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
லெப். கேணல் வாசன் உட்பட ஏனைய போராளிகளின் வீரவணக்க நாள்
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம்(17.10.2026) மாலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீரில் மூழ்கிய இளைஞனின் சடலம் மீட்கப்பட்டு, புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

1 thought on “முல்லைத்தீவில் நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞன் மரணம்!”
Comments are closed.