அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மத்தியஸ்தர்கள் வாயிலாக மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் கடந்த ஏழு மாதங்களாக தொடர்ந்து வரும் தீவிரப் போரை முடிவிற்கு கொண்டுவரும் நோக்கில், இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஐ.நா சபைக் கூட்டத்தின் போது, ஈரான் ஒரு வார கால தற்காலிகப் போர் நிறுத்தத் திட்டத்தை முன்வைத்தது.
இத்திட்டத்தின் கீழ் ஈரான் மற்றும் லெபனானில் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவது, முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவிப்பது, ஈரானிய எண்ணெய் மீதான தடைகளை நீக்குவது மற்றும் உலகின் முக்கிய வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது ஆகியவை முதன்மை நிபந்தனைகளாகச் சேர்க்கப்பட்டிருந்தன.
மேலும், அணுசக்தித் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கவும் ஈரான் விருப்பம் தெரிவித்திருந்தது.
